சிறகுகள் பாரம்பரிய விளையாட்டுப் பாசறை 2024
சாவகச்சேரி
சிறகுகள் பாரம்பரிய விளையாட்டுப் பாசறை 2024
சாவகச்சேரி
சிறகுகள் பாரம்பரிய விளையாட்டுப் பாசறை
தரம் 3 தொடக்கம் 9 வரையான வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ள முடியும்.
02.07.2023 ஞாயிறு அன்று காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும்.
கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கி வைக்கப்படும்.
க.பொ.த உயர்தரத்திற்குச் செல்லும் மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் - திசையறி 2023
பாடநூல் கல்வியைத் தாண்டிய, எதிர்கால இலக்குகளை இனங்காண்பதற்கான இணையவழி வழிகாட்டல்.
அறிவியல், கலை, சட்டம், விவசாயம், இயற்கை, தொழில்நுட்பம், ஆளுமைவிருத்தி, தலைமைத்துவம், சுற்றுச்சூழல், பொருளாதரம், போட்டிப்பரீட்சைகள், க.பொ.த உயர்தர பாடத்தெரிவுகள் உள்ளிட்ட பலதுறை சார்ந்த இலக்கு நோக்கிய வழிகாட்டல்கள்.
வாசிப்பு திறனைவிருத்தி செய்தல் மற்றும் நூலகப் பாவனையினை ஊக்குவிக்கும் வகையில் சிறகுகள் அமையம் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கான போட்டிகள்.
போட்டி விதிமுறைகள்
போட்டிக்கான ஆக்கங்கள் அனைத்தும் Sirakukalinfo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது +94 74 139 0277 வாட்ஸ்அப் இலக்கம் ஊடாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
பங்குபற்றும் போட்டியாளர்களின் பெயர்,முகவரி, தொலைபேசி இலக்கம், பாடசாலை, தரம் ஆகியன விபரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும்
ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய இறுதி திகதி 15.06.2023
சித்திரம், கட்டுரை, கவிதை ஆகிய படைப்புக்கள் PDF வடிவில் அனுப்பப்படல் வேண்டும்.
பேச்சு - தெளிவான முறையில் காணொளியாக உருவாக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
வெற்றியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டி பிரிவுகளும் போட்டிகளும் தலைப்பும்
தரம் 1, 2, 3 - சித்திரப் போட்டி - நூலகம்
தரம் 4, 5, 6 - பேச்சுப் போட்டி - நூலகத்தில் முதல் அனுபவம்
தரம் 7, 8, 9 - கட்டுரைப் போட்டி - நூலகம் பற்றி எனது எண்ணப்பாடு
தரம் 10, 11 - கவிதைப் போட்டி - எரிந்த நிலையில் நூலகம்
சித்திரப்போட்டி
"நூலகம்" எனும் தலைப்பில் சித்திரம் வரைதல் வேண்டும்.
சித்திரம் A4 தாளில் வரையப்படல் வேண்டும்.
தேவையான அனைத்து வர்ணங்களையும் பயன்படுத்தலாம்.
பேச்சு போட்டி
"நூலகத்தில் முதல் அனுபவம்" என்னும் தலைப்பில் பேச வேண்டும்.
கால எல்லை: 4-5 நிமிடங்கள்.
பேசும் போது அதனை வீடியோ பதிவு செய்து அனுப்பி வைத்தல் வேண்டும்.
வீடியோ தெளிவானதாக இருத்தல் வேண்டும்.
கட்டுரைப் போட்டி
கட்டுரை "நூலகம் பற்றி எனது எண்ணப்பாடு" தலைப்பில் எழுதப்பட வேண்டும்.
கட்டுரைகள் A4 தாளில் எழுதப்பட வேண்டும்
சொற்கள் 400-500
நீலம் அல்லது கறுப்பு பேனா மாத்திரம் உபயகோப்படுத்தப்பட வேண்டும்
1cm இனாலான வெளிக்கோடு (outline) ஏற்றுக்கொள்ளப்படும்
கவிதை போட்டி
கவிதை தலைப்பு "எரிந்த நிலையில் நூலகம்"
(யாழ் நூலக எரிப்பினை முன்னிறுத்தி - நூப்பினை முன்னிறுத்தி - நூலகங்கள் மற்றும் வாசிப்பு விருத்தியினை நோக்கிய கவிதையாக அமைய வேண்டும்)
A4 தாளில் கவிதை எழுத்தப்படல் வேண்டும்
நீலம் அல்லது கறுப்பு பேனா பயன்படுத்தலாம்
சொற்கள் 40-59
தகவல் பெற
விதுஷா தங்கவேல்
படிப்பகம் - பொறுப்பாளர்,
வன்னிப் பிராந்தியம்
சிறகுகள் அமையம்
+94 74 139 0277
சுற்றுச்சூழல் பாசறை
யாழ்ப்பாணம்
சிறகுகள் அமையத்தின் சுற்றுச்சூழல் பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான "சுற்றுச்சூழல் பாசறை"
தரம் 6, 7, 8 மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் பாசறை எதிர்வரும் 3,4 ஜூன் (சனி, ஞாயிறு) தினங்களில் காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. மாணவர்களுக்கு சூழலியல் மீதான பற்றுதலினை ஏற்படுத்தும் வகையில் செயற்பாட்டு ரீதியிலான பாசறையாக அமையவுள்ளது.
சிறகுகள் அமையத்தின் "விளக்கு" செயற்றிட்டமூடாக ஆசிரியர்களுக்கான வாண்மைவிருத்தி இணையவழி செயலமர்வு
மாணவர்களின் கல்வியில் ஒளி வீசிட ஆசிரியர்களுக்கான தொடர்பாடல் தொழிநுட்பவியல், கல்வியலியல், மற்றும் பயனுள்ள விடயங்களை உள்ளடக்கிய செயலமர்வாக வாராந்தம் இணைய வழியில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சி திட்டத்தில் கலந்துகொள்ள மற்றும் செயலமர்வுகள் தொடர்பான விடையங்களைப் பெற்றிட பதிவினை மேற்கொள்ளுங்கள்.